Wednesday, July 28, 2021

இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|28/07/2021

 

இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|28/07/2021



இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|28/07/2021 1. தவக்கல்னா செயலியில் அதன் பயனாளிகளுக்கு அவர்களின் உடல்நிலை தொடர்பான ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் அதன் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் சுகாதார அமைச்சகத்தை (MoH) தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உள்நாட்டு தொழிலாளர் ஒப்பந்தங்களுடன் தொழிலாளர் காப்பீட்டையும் சேர்த்து வழங்கப்படவுள்ளது என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3. சவுதி அரேபியாவில் சமூக ஊடக உள்ளடக்கத்தை திருடினால் 6 மாதம் வரை சிறை மற்றும் 250000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 4. இதுவரை சவுதி அரேபியாவில் 587 மையங்கள் மூலமாக 25 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது 5. ரியாத் பிராந்தியத்தில் தொழிலாளர்களுக்கு ஈத் விடுமுறையின் ஐந்து நாட்களில் 700 இறுதி வெளியேற்ற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது

https://www.youtube.com/watch?v=Spjb5lunyfo

No comments:

Post a Comment