இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|19/07/2021
1. இந்த வருட ஹஜ் வழிபாடுகள் துல் ஹஜ் மாதம் 8 ம் நாள் ஞாயி்ற்றுகிழமை காலை முதல் ஆரம்பமானது இன்று திங்கட் கிழமை முக்கியமான வழிபாடான அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
2. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா விதிமிறல் காரணமாக பதியப்பட்ட வழக்குகள் 21523 என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
3. ஹஜ் அனுமதியில்லாமல் புனித தலங்களுக்குள் நுழைய முயன்ற 20 நபர்களை சவுதி காவல்துறையினர் கைது செய்தனர்
4. நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த சூழ்நிலையிலும் சவூதி அரேபியாவுக்கு திரும்பி வர முடியாது என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) தெரிவித்துள்ளது.
5. கடந்த 17-7-2021 அன்று வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் மழை பொழிந்தது இதன் காரணமாக சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment