வளைகுடா செய்திகள் - 02-08-2021
இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|28/07/2021 1. தவக்கல்னா செயலியில் அதன் பயனாளிகளுக்கு அவர்களின் உடல்நிலை தொடர்பான ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் அதன் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் சுகாதார அமைச்சகத்தை (MoH) தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உள்நாட்டு தொழிலாளர் ஒப்பந்தங்களுடன் தொழிலாளர் காப்பீட்டையும் சேர்த்து வழங்கப்படவுள்ளது என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3. சவுதி அரேபியாவில் சமூக ஊடக உள்ளடக்கத்தை திருடினால் 6 மாதம் வரை சிறை மற்றும் 250000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 4. இதுவரை சவுதி அரேபியாவில் 587 மையங்கள் மூலமாக 25 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது 5. ரியாத் பிராந்தியத்தில் தொழிலாளர்களுக்கு ஈத் விடுமுறையின் ஐந்து நாட்களில் 700 இறுதி வெளியேற்ற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது
சவுதி அரேபியச் செய்திகள் 24/07/2021
https://www.youtube.com/watch?v=D3Fc66bVq3Y
இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|24/07/2021 1. கடும் மழை வெள்ளத்தால் பாதிக்ப்பட்டுள்ள சீனாவிற்கு சவுதி அரேபியா ஆறுதல் தெரிவித்துள்ளது விரைவில் பாதிப்புகளிலிருந்து சீனா மீளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது 2. மாற்றுத் திறனாளிகளின் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திய 2107 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என சவுதி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது 3. ஹஜ் வழிபாடுகளின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 23-7-2021 மாலையுடன் இறுதி தாவாஃபை முடித்து ஹாஜிகள் மக்காவிலிருந்து புறப்பட்டு சென்றனர் 4. டோக்யோவில் இந்த ஆண்டு நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டியின் துவக்கவிழா நிகழ்சியில் சவுதி அரேபியத் தூதுக்குழு பங்கேற்றது. 5. ஜீஸான் மாகாணத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மீறிய 80 நபர்களை சவுதி காவல்துறையினர் கைது செய்தனர்
சவுதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சவுதி அரசு வழங்கும் சலுகை
கொரோனோ தொற்று காரணமாக இந்தியா வந்துள்ள சவுதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சவுதி அரசாங்கம் சலுகை வழங்கியுள்ளது.
இக்காமா, விசா போன்றவைகள் ஆகஸ்டு 31, 2021 வரை இலவசமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சவுதியில் பணிபுரியும் இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
Like & Share This
https://www.youtube.com/watch?v=8wItKL1n-Zc
சவுதி அரேபியச் செய்திகள்|21/07/2021
https://www.youtube.com/watch?v=KmqEz2TiJ4s
இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|21/07/2021 1. சவுதிக்கு வெளியிலுள்ள சவுதி குடியிருப்பாளர்களின் எக்ஸிட் ரீ என்ட்ரி விசாக்கள் மற்றும் விசிட் விசாக்கள் ஆகஸ்ட் 31 வரை கட்டணமின்றி காலநீடிப்பு செய்யப்படுவதாக சவுதி அரசு அறிவித்துள்ளது 2. இதுவரை சவுதி அரேபியாவில் 587 க்கும் அதிகமான தடுப்பூசி மையங்கள் மூலமாக 23 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது 3. சவுதி அரேபியா முழுவதும் செவ்வாய் கிழமை ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் அனைவரும் கலந்து தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் 4. ஹஜ் விதிமிறல்களில் ஈடுபட்ட 77 பேர் சவுதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஹஜ் பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் 5. இந்த வருட ஹஜ் உதவி குழுக்களில் பெண்கள் அதிகமாக சேவையாற்றிவருகின்றனர் என சவுதி இஸ்லாமிய விவகாரத்துறை அறிவித்துள்ளது
கட்டுக்கடங்காமல் ஒன்று கூடிய மக்கள் கூட்டம் | Kuwait tamil news
https://www.youtube.com/watch?v=mVL9wO467lE
1. இந்த வருட ஹஜ் வழிபாடுகள் துல் ஹஜ் மாதம் 8 ம் நாள் ஞாயி்ற்றுகிழமை காலை முதல் ஆரம்பமானது இன்று திங்கட் கிழமை முக்கியமான வழிபாடான அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
2. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா விதிமிறல் காரணமாக பதியப்பட்ட வழக்குகள் 21523 என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
3. ஹஜ் அனுமதியில்லாமல் புனித தலங்களுக்குள் நுழைய முயன்ற 20 நபர்களை சவுதி காவல்துறையினர் கைது செய்தனர்
4. நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த சூழ்நிலையிலும் சவூதி அரேபியாவுக்கு திரும்பி வர முடியாது என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) தெரிவித்துள்ளது.
5. கடந்த 17-7-2021 அன்று வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் மழை பொழிந்தது இதன் காரணமாக சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
இன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|17/7/2021
1. ரியாதில் கொரேனா விதிமீறலில் ஈடுபட்ட 103 பேர் சவுதி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் 2. "உங்கள் குடை உங்கள் கைகளில்" முயற்சியின் ஒரு பகுதியாக மக்கா மசூதியில் உள்ள வழிபாட்டாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் (12) ஆயிரம் குடைகளை விநியோகிக்கப்பட்டன 3. சவுதி அரேபியாவில் தொழுகை நேரங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சவுதி சேம்பர்ஸ் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 4. ஜித்தாவின் கிங் அப்துல்அஜுஸ் சர்வதேச விமான நிலையம் ஹஜ் யாத்ரீகர்களைப் வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையின் உள்ளது என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது 5. மாற்றுதிறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்திய 2277 வாகன ஓட்டுனர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு அவ
28 நாட்களில் 2 தடுப்பூசி எடுத்தவர்கள் moh இணையதளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்
சவுதி அரேபியா செய்திகள்:
விமான சேவை மற்றும் தடுப்பூசி சான்றிதழ் சம்பந்தமான பேச்சுவார்த்தை இந்தியாவிலிருந்து கத்தார் வழியாக சவுதி பயணம் செய்வது சம்பந்தமாக சிறு விளக்கம் செர்பியா வழியாக சவுதிக்கு வரவேண்டாம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஸ்மார்ட் கார்டு, 2nd dose போடாதவர்களுக்கு அனுமதி இல்லை தமிழகத்தை சார்ந்தவர் சவுதி அரேபியா ரியாத்தில் விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அவர் சம்பந்தமான முழுமையான தகவல் தவக்கல்நாவில் சுகாதார நிலையை மாற்றி மோசடியில் 122 பேர் ஈடுபட்டிருப்பதை ஊழல் தடுப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது.
வளைகுடா நாடுகளின் செய்திகள்:
வளைகுடா நாடுகளின் செய்திகள்: https://youtu.be/FgA6_iFw_FY துபாயில் புதிய சேவை துவக்கம்.ஈத் அல் அத்ஹா குர்பானியை வாட்ஸ்அப் மூலமாக பெறலாம். கொரோனா தடுப்பூசி பெற்று இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிக்க இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல். ஐக்கிய அரபு அமீரகத்தில் 855 கைதிகளை விடுவிக்க ஷேக் கலீஃபா அவர்கள் 13.07.2021 அன்று உத்தரவிட்டார். குவைத்தில் குற்றங்கள் 65 சதவீதம் போதைப்பொருள் தொடர்பானவை என்று அல்-கபாஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்களின் விசா 2000 தினார்கள் கட்டணத்துடன் புதுப்பிக்க முடிவு. துபாயில் விசா எடுப்பவர்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை மையம் அபுதாபி வருவோருக்கு குவாரண்டைன் தேவையில்லை. கிரின் லிஸ்ட் வெளியீடு. குவைத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மசூதிகளில் ஈத் அல் அத்ஹா தொழுகைக்கு அனுமதி. அரசின் புதிய அறிவிப்பு.
சவுதி அரேபியா செய்திகள்: கலரை வைத்து உங்களுக்கு எந்த தடுப்பு ஊசி போடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்
சவுதி அரேபியா செய்திகள்: https://youtu.be/b-jwQRTCc74 கலரை வைத்து உங்களுக்கு எந்த தடுப்பு ஊசி போடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் இந்தியா அமீரகம் இடையே ஆன விமான போக்குவரத்து ஜூலை 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது Ncb மற்றும் samba ஆகிய வங்கிகள் இணைக்கும் பணிகள் முடிவடைந்தன. சவூதி ரியாலுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சவூதி ரியாலுக்கு இணையான இலங்கை ரூபாயின் மதிப்பு
https://www.youtube.com/watch?v=3nkGYqQw7Tc
ன்றைய சவுதி அரேபியச் செய்திகள்|15/07/2021 1. தபுக் பிராந்தியத்தை சார்ந்த சிற்பி ஒருவர் 8 ஆண்டுகளாக 30 மார்பிள் பளிங்கு அடுக்குகளில் புனித குர்ஆனையும் முழுவதையும் செதுக்கி முடித்துள்ளார் 2. பேரீத்தம் பழம்,பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சவுதி அரேபியாவிலிருந்து தைவானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள சவுதி வணிக அலுவலகம் தெரிவித்துள்ளது 3. கொரோனா பரவலை தடுப்பதற்கு பங்களிக்கும் விதத்தில் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பாக தடுப்பு மருந்துகளை கொண்ட முதல் சவுதி விமானம் துனிசியா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 4. ஹஜ் அனுமதி இல்லாத யாத்ரீகர்கள் புனித தளங்களுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என ஹஜ் பாதுகாப்புப் படைகளின் தளபதி அறிவித்துள்ளார் 5. இந்த வருட ஹஜ் யாத்ரிகளுக்கான உதவுவதற்கு மருத்துவ பாதுகாப்பு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் தயார் நிலையில் உள்ளது என ரெட் கிரசண்ட் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் Moh இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி? | How to Register Vaccine Certificate in Tawakkalna Just in 5mins | Upload vaccine certificate to MOH
கார் மெக்கானிக் வேலைக்கு தேவை - ரியாத்
ரியாத்தில் கார் மெக்கானிக் தேவை. தொடர்புக்கு : 0596085631
Need 3 persons for labour job. Contact only those in Riyadh
சவுதியில் டிரைலர் டிரைவர் தேவை
சம்பளம் : 2500 ரியால்
ட்ரிப் பணம் : 50 ரியால்
தொடர்புக்கு : 0582887542
Salary: 2000 riyal
சவுதியில் இருப்பவர்கள் ஹவுஸ் டிரைவர் வேலை தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்
சம்பளம் : 2000 ரியால்
தொடர்பு எண் : 0507321942
கபாலத் மாற்றப்படும்.
பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்இ அந்த யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
வரும் 24-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் நடைபெறும் உயா்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 14 அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல்களை நடத்த அந்தக் கூட்டம் வழிகோலும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
அதைச் செய்யாவிட்டால் அது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகள் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதலாகும்.
ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையாக மாநில அந்தஸ்து வழங்கிஇ அங்கு தோ்தல் நடத்துவதன் மூலம் அங்குள்ள மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
அத்துடன் அங்கு மத்திய அரசின் ஆட்சி நடைபெறுவதற்கு மாறாக அங்குள்ள விவகாரங்களை சுயமாக கையாள்வதற்கு சட்டப்பேரவையை பெற முடியும்.
இது மட்டும்தான் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி.
அரசியலமைப்புஇ ஜனநாயகம் மற்றும் மக்களின் நலன் கருதி காங்கிரஸ் விடுத்துள்ள இந்தக் கோரிக்கையை ஏற்பதா அல்லது கூட்டம் நடத்துவதா என்பது குறித்து இனி பிரதமரும் பாஜகவும்தான் முடிவு செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றம் கடமையை நிறைவேற்றுமா?:அயோத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் பாஜக தலைவா் ரூ.20 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கியுள்ளாா்.
அந்த நிலத்தை அங்கு கட்டப்படும் ராமா் கோயிலுக்காக ரூ.2.5 கோடிக்கு கோயில் அறக்கட்டளையிடம் அவா் விற்பனை செய்துள்ளாா்.
இதன் மூலம் அவா் 1இ250 சதவீதம் லாபமடைந்துள்ளாா்.உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமா் கோயில் கட்டப்படுகிறது. அந்தக் கோயில் அறக்கட்டளையை பிரதமா் மோடி உருவாக்கினாா்.
எனவே அயோத்தி நில முறைகேட்டில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டியது உச்சநீதிமன்றம் மற்றும் பிரதமரின் பொறுப்பு அல்லவா? ராமா் கோயில் கட்டுவதற்கான அனைத்து நிதிப் பரிவா்த்தனைகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
அந்தப் பணிகளை உச்சநீதிமன்றம் மேற்பாா்வையிட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளும்இ பிரதமரும் தங்கள் கடமையை நிறைவேற்றுவாா்களா என்பதே தற்போதைய கேள்வி என்று ரண்தீப் சுா்ஜேவாலா தெரிவித்தாா்
இந்தியாவில் பெட்ரோல்இ டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு மக்களுக்கு புதுப்புது வேதனைகளை தருகிறது. ஆனால்இ இதையும்இ தன்னுடைய ஆட்சிக்கால சாதனையாகத்தான் மோடி பார்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்து பல நாட்கள் ஆகிவிட்டது. தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெட்ரோல்இ டீசல் விலை உயர்வால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணராத ஆட்சியாளர்களை நாம் பெறவில்லை.
அவர்களது நோக்கம் ஏழைஇ பாழைகளை சுரண்டி கொழுத்த பணக்காரர்களை குறிப்பாக அவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களை வளம் பெறச் செய்வதே என்பது நிதர்சனம். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அறிவிக்கும் அதே அரசுதான்இ பெட்ரோல்இ டீசலுக்கான வரியையும் அதிகரிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அறிவித்த மோடி அரசுதான்இ நாம் நம் டூவீலருக்கு போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.33 வரியாக வசூலிக்கிறது. 2014ல் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இது வெறும் ரூ.9.48 ஆக இருந்தது.
அதாவது மோடி ஆட்சிக்காலத்தில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.23.52 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. டீசலை பொறுத்தவரை 2014ல் லிட்டருக்கு ரூ.3.56ஆக இருந்த மத்திய அரசு வரி இப்போது ரூ.31.80 ஆக உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த ஆண்டு பெட்ரோலிய பொருட்கள் வரி வருவாய் ரூ.72இ160 கோடி. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை 10 மாதத்தில் கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? ரூ.2இ94இ000 கோடி. அடுத்த 2 மாதங்கள் கணக்கை மோடி அரசு இன்னும் வெளியிடவில்லை.
கடந்த 2019-20ஐவிட 2020-21ம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.1இ90இ000 கோடி பெட்ரோல்இ டீசலுக்கு புதிதாக விதிக்கப்பட்ட வரி மூலம் கிடைக்கும் என்று அரசே பெருமிதத்துடன் தெரிவிக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த ரூ.1.45 லட்சம் சலுகையை வட்டியும் முதலுமாக பெட்ரோல்இ டீசல் விற்பனையில் வாரி சுருட்டியுள்ளது அரசு.
கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் இழந்துஇ கடனில் தத்தளிக்கும் சாமானியனின் தலையில் இப்படி ஒரு சுமையை ஏற்றிய அரசுக்கு கண்டனங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்இ பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் குழுவினரும் தங்கள் பங்குக்கு பெட்ரோல்இ டீசல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். பெட்ரோல்இ டீசல் வரியை பணம் கறக்கும் பசுவாக நினைப்பதாக அரசை சாடிய அந்த குழுவினர்இ அரசின் செயல்பாட்டால் பொருளாதார மீட்சி காலதாமதமாவதாக கவலை தெரிவித்துள்ளனர். இதை தடுக்க உடனடியாக எரிபொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று ஆய்வுக் குழு கூறியுள்ளது. மக்கள்இ அரசியல் தலைவர்கள் சொல்லி கேட்காத அரசுஇ அவர்கள் நியமித்த ஆய்வுக் குழுவின் ஆலோசனையையாவது கேட்குமா?